இளைஞர் கொலை – சக நண்பர் உட்பட 4 பேர் கைது

சென்னை:
புளியந்தோப்பு பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: சென்னை, புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனு (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சூர்யா மற்றும் 5 பேர் பேச வேண்டும் என அழைத்ததன் பேரில், கடந்த 20-ம் தேதி இரவு, கன்னிகாபுரம், ரயில்வே டிராக் அருகில் உள்ள நீரேற்றும் நிலையம் அருகில் சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சீனுவை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்து தப்பியுள்ளனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாகக் கொலை தொடர்பாக புளியந்தோப்பு சூர்யா (24), அவரது கூட்டாளிகள் அதே பகுதி மணிகண்டன் (23), மணிகண்டன் (20), சாமுவேல் (19) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் தற்போது கைது செய்யப்பட்ட சூர்யாவின் உறவினர் கிரி என்பவர் அண்மையில் இறந்துபோனார். அவரது சாவுக்கு சீனு வராததால், அவர் மீது சந்தேகப்பட்டு, சீனுவை கொலை செய்ய சூர்யா திட்டமிட்டு, தமது நண்பர்களுடன் சேர்ந்து, சீனுவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு