உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேச்சு

மதுரை :
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரூ.166 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் பேசிய ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, ‘இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு நீதித்துறை கட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு நீதியை வழங்கியுள்ளன.
காவல்துறையினர் பொதுமக்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும். இ- கோர்ட் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் நீதிமன்றங்களில் காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணிகள் நடைபெறும்.இ – கோர்ட் திட்டத்திற்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 7 வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுக்கின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 60 வழக்குகளுக்கு மேல் விசாரணை நடைபெறுகிறது. தொழில்நுட்ப வசதிகள் வழக்குகளை விரைவாக முடிக்க உதவும். பழமை மற்றும் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்படுகிறது விரைவில் உச்சநீதிமன்றத்தில் தமிழ் மொழ பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.