உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா- — பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு:
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியானது உலகக் கோப்பை தொடரை சிறந்த வகையில் தொடங்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தது. அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த போதிலும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையையும் வீழ்த்தியது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 191 ரன்களில் ஆட்டமிழந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தநிலையில் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு இரு அணிகளும் மோத உள்ளன. யார் வெற்றி பெறுவார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.