உலகக் கோப்பையில் அக். 15-ல் இந்தியா – பாகிஸ்தான் மோத வாய்ப்பு

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி முடிவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் ஆட்டத்தில் அக்டோபர் 5ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்தும் மோதக்கூடும்.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கலாம் என்றும், இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் அணி மோதும் ஆட்டங்கள் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வகையில் சென்னைக்கு கூடுதல் ஆட்டங்களை நடத்த வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதம் 2 அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக நுழையும். 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் முழு அட்டவணையையும் பிசிசிஐ அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.