ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன் 2026 நடைபெற்றது. பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கினை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களின் பங்களிப்பு அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கான பாலமாக அமைந்து விடுகிறது, மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் சமூகத்தின் மனசாட்சியாக ஊடகங்கள் திகழ்கின்றன என்றார். அரசின் செயல்பாட்டினை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகங்களின் ஆக்கபூர்வ விமர்சனங்கள் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் என்றும், தவறான செய்திகள் சமூக அமைதியை குறைப்பதோடு ஜனநாயகத்தின் அச்சுறுத்தலாக திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் பழனிச்சாமி, சமூகத்தின் கடைசி மனிதன் வரை முக்கியமான செய்திகள் சென்றடைய ஊடகத்தினரின் பங்களிப்பு முக்கியமானது என்றார். தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே செய்தியாளர்களாக மாறிவிட முடியாது, செய்தியாளர்கள் மட்டுமே முழுமையான செய்திகளை வழங்கிட முடியும் என்று குறிப்பிட்ட அவர், தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படும் செய்திகளில் பரபரப்பான செய்திகளே அதிகம் இடம் பிடிக்கின்றன என்றார். மக்களுக்கு தேவையான செய்திகள், வளர்ச்சித் திட்டங்கள் சார்ந்த செய்திகள் குறைவாகவே ஊடகங்களில் வெளியாகிறது என்றும், வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஊடகத்தினர் தங்களுடைய செய்திகளில் வளர்ச்சி தொடர்பான செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தவறான செய்திகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படும் செய்திகள் எது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சவால் நிறைந்த சூழல் நிலவிவரும் நிலையில் அதற்கான தனித்திறனை ஊடகத்தினர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பொருளாதார, வளர்ச்சி தொடர்பான செய்திகள் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றும், தவறான செய்திகளை தவிர்த்து, பிற மொழி கலப்பின்றி செய்திகளை வழங்கக்கூடிய வகையில் அறிதலும் புரிதலும் கொண்ட பத்திரிகையாளர்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடுவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மண்டல அலுவலர் வீரேந்தர் சம்யால் பேசுகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார். நடப்பு ஆண்டில் கிட்டத்தட்ட ரூ. 14,816 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், கடந்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2200 கிமீ நீளமுள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் எத்தாப்பூர் மரவள்ளிக்கிழங்கு, ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் முத்துக்குமரன், பேராசிரியர்கள் பாலமுருகன், அருட்செந்தில் ஆகியோர் மரவள்ளிக்கிழங்கு, ஆமணக்கு விவசாயத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு ரகங்களை அறிமுகம் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் தென்னரசு பேசுகையில், இந்நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு பாடங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குனர் அருண்குமார், பயிற்சி உதவி ஆட்சியர் வந்தனா, ஊடக தகவல்தொடர்பு அலுவலர் அழகுதுரை உள்ளிட்ட அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டலம், தனித்த வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் புவிசார் குறியீட்டு சூழலமைப்பை வலுப்படுத்துகிறது

2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின்

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு