இந்த ஆண்டு (2025) கச்சதீவு திருவிழா மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறாவதாக உள்ளது. இதையடுத்து வழக்கம்போல பாரம்பரிய மீனவர்கள் தங்களது நாட்டுப் படகில் கச்சதீவு திருப்பயணம் சொல்வது குறித்த கச்சதீவு பாரம்பரிய நாட்டுப் படகு திருப்பயணக் குழு ஆலோசனை கூட்டம் இன்று காலை 11மணிக்கு பாம்பனில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருபயண குழு சார்பாக பாரம்பரிய மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன் 20 நாட்டுப்படகில் பெரும் திரளாக கச்சதீவு திருப்பயணம் சொல்வது. அரசின் முழுமையான அங்கீகாரம் பெரும்பொருட்டு “கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு” என்ற பெயரில் சங்க விதியின் கீழ் பதிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
கட்டணம் வாங்கி கொண்டு மீன்பிடி விசைப்படகில் திருப்பயணிகளை அழைத்து செல்வதை தவிர்த்து, அரசு ஏற்பாட்டில் பயணிகள் கப்பலில் கச்சதீவு திருவிழாவிற்கு திருப்பணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் 3259/2018 உத்தரவை செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்த மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும்.
கச்சதீவு திருப்பயணம் செல்லும் நாட்டுப்படகுகளுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக 100 லிட்டர் டீசல் இலவசமாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கடந்தாண்டு சில அரசியல் காரணங்களால் கச்சதீவு திருவிழா தடைப்பட்டது. நாட்டுப் படகில் பாரம்பரிய மீனவர்கள் திருபயணம் செல்ல இருந்தும், ஆன்மீக விழாவில் சிலர் அரசியலை புகுத்தி, கச்சதீவை திருப்பயணத்தை அரசியலாக்கி கச்சதீவு திருப்பயணத்தை தடுத்து விட்டனர். இதனால் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று நேர்த்தி கடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசு வருவாய்த் துறை மற்றும் காவல்துறை மூலம் தயார் நிலையில் இருந்த நாட்டுப்படகு திருப்பயணத்தை பல்வேறு காரணங்களை கூறி தடுத்து நிறுத்தியது.
அதேபோல் பணம் கொடுத்து விசைப்படகில் திருப்பயணம் செல்ல இருந்த ஆயிரக்கணக்கான திருப்பணிகள் தங்கள் நேர்த்தி கடனை கச்சத்திவு புனித அந்தோணியாருக்கு செலுத்த முடியாமல் மன உளைச்சலுடன் திரும்பி சென்றனர்.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாக்கு செல்லும் திருப்பயணிகளை நாகப்பட்டினத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள 300 பேர் பயணிக்க கூடிய இரண்டு பயணிகள் கப்பலை பயன்படுத்தி தமிழக அரசு அழைத்து செய்ய வேண்டும். இதனால் கட்டணம் வசூலித்து மீன்பிடி விசைப்படகுகளில் அழைத்துச் செல்லும் போது ஏற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இதில் நாட்டுப்புடகு மீனவர் சங்கத் தலைவர் ஜெரோமியாஸ் தலைமையிலும், ஓலைக்குடா மீனவ கிராமத் தலைவர் திரு ஜெரோன்குமார் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி மற்றும் திரு கெம்பிஸ் திரு ரூபன், திரு எட்வின், திரு ஜான் பிரிட்டோ, திரு பேட்டன், திரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு