கருப்பின இளைஞர் மீது நாயை ஏவி கடிக்க வைத்த போலிசார் – அமெரிக்காவில் நடந்த கொடுமை…

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் போக்குவரத்து சோதனையின் போது, கருப்பின இளைஞரை காவல்துறையினர் நாயை கொண்டு கடிக்க வைத்து கைது செய்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 23 வயதான ஜடாரியஸ் ரோஸ் என்ற கருப்பின இளைஞர் ஓட்டி வந்த கனரக வாகனத்தை ஓஹியோ மாகாண போலீசார் நிறுத்தக் கோரிய போது, அவர் நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது /வாகனத்தை துரத்திச் சென்ற ஓஹியோ காவலர்கள் அதனை கொலம்பஸுக்கு அருகே உள்ள ஒரு மாநில நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர். வாகனத்தில் இருந்து ஜடாரியஸை கீழே தள்ளிய காவலர்கள், அவருக்கு கை விலங்கிட முற்பட்டனர். அப்போது சக காவலர்கள் ஒருவர் மோப்ப நாயை கட்டவிழ்த்து விட்டு, கருப்பின இளைஞர் ஜடாரியஸ் ரோஸை தாக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து இளைஞர் மீது பாய்ந்த அந்த நாய் அவரை கடித்து குதறியது. நாயை பிடியுங்கள் என்று இளைஞர் கதறுவதும் காவலர் நாயை பிடிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் காணொளியில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 4ம் தேதி நடைபெற்ற இந்த மனிதாபிமான மற்ற காணொளி வெளியாகி அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த செயலுக்கு காரணமாக ஓஹியோ காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்