கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் இன்று பரபரப்பு தீர்ப்பு நிறைவேற்றம்…
கரூரில் பிரண்ட்லைன் டெக்னாலஜி சென்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் அன்புத்தேன் இவர் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனின் மகன் ஆவார் இவர் ஏர்டெல் நிறுவனத்தில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தார் இடையில் புதிதாக ஒரு பிளான் வந்துள்ளது அதில் சேர்ந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ஏர் டெல் நிறுவன பணியாளர் சொன்னதை நம்பி வேறொரு பிளானுக்கு மாறினார் ஆனால் அதுவரை ரூபாய் 500 மட்டும் மாதம் பில் வந்தது தாண்டி மாதம் 2000, 5000 என்று பில் வர ஆரம்பித்தது அது குறித்து கேட்ட பொழுது சரியான பதிலை ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரிகள் சொல்லவில்லை எனவே இது முறைகேடாக அதிக பில் அனுப்பிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அன்புத்தேன் வழக்கு தொடர்ந்தார்
அந்த வழக்கை விசாரித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
அன்புத்தேனுக்கு மன உளைச்சல் காரணமாக ஏர் டெல் நிறுவனத்தார் 33 ஆயிரத்து 637 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இன்று ஏர்டெல் நிறுவனத்தார் 33 ஆயிரத்து 637 ரூபாய்க்கான செக்கை கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 23/06/2023 அன்று சமர்ப்பித்தனர கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் கூடுதல் நீதிபதி ரத்தினசாமி ஆகியோர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் முன்னிலையில் அன்பு தேனிடம் மேற்படி காசோலை வழங்கினர்.