காயம் காரணமாக தீக் ஷனா இறுதிப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்

கொழும்பு: தொடைப் பகுதியில் ஏற்பட்டகாயம் காரணமாக அவதிப்பட்டு உள்ளதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக் ஷனா பங்கேற்பது உறுதியாகவில்லை என தகவல்கள் வந்துள்ளது.

புதிர் ஸ்பின்னரான தீக் ஷனா, ஆசிய கோப்பைதொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்துகொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் முடிவு வெளிவந்த பின்னரே அவர், நாளை (17-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? என தெரியவரும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீக் ஷனா பலமுறை பீல்டிங்கின் போது வெளியே சென்றார். இருப்பினும் பந்து வீச்சில் தனது 9 ஓவர்களையும் முழுமையாக வீசினார். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் ஏற்கெனவே முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு மதுஷங்கா, லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது தீக் ஷனாவின் காயமும் இலங்கை அணியை கவலையடையச் செய்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400