கோலிக்கு சாதனைகளை பல புரிய சச்சின் வாழ்த்து!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 49ஆவது சதம் அடித்த விராட் கோலிக்கு 50ஆவது சதம் அடித்து தனது சாதனையை முறியடிக்க சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 37ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 23 ரன்களில் கேசவ் மகாராஜ் பந்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். விராட் கோலி அரைசதம் அடித்து அதனை சதத்திற்கு கொண்டு சென்றார். 3 போட்டிகளுக்கு பிறகு 4ஆவது போட்டியில் 49ஆவது சதம் அடித்துள்ளார். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 48ஆவது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி அதன் பிறகு 95, 0 மற்றும் 88 ரன்களில் அடுத்தடுத்த ஆட்டமிழந்து 5 மற்றும் 12 ரன்களில் 49ஆவது சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இந்த நிலையில் தான் தனது 35ஆவது பிறந்தநாளான நேற்று ஒரு நாள் போட்டிகளில் 49ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்தார். விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார். அதுவும் 277 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 31 சதங்களும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களும் அடித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். சிறப்பாக விளையாடுனீர்கள் விராட். 49 லிருந்து 50 ஆக எனக்கு 365 நாட்கள் ஆனது. அடுத்த சில நாட்களில் 50ஆவது சதம் அடித்து எனது சாதனையை நீங்கள் முறியடிப்பீர்கள் என நான் நம்புகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400