சைதாப்பேட்டையில் நடந்த சம்பவத்தால் சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில்  புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது.

சென்னை நகரில் புறநகர் ரயில் சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.  குறிப்பாக வெளியூரிலிருந்து விடியற்காலை சென்னை வருவோர், கல்லூரி மற்றும்  பள்ளி மாணவர்கள்,  அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் இந்த ரயில் சேவையை நம்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று  சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலிலிருந்த 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையொட்டி சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கல்லூரி, அலுவலகம் செல்வோர்  பணிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ரயில்வே காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.