வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் கைதானதாகப் புகைப்படங்கள் வெளியானது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிபராக இருந்த போது தொடர்ச்சியாக அவர் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் அவர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். இப்போது அவர் மீதான வழக்கு ஒன்று விசுவருபம் எடுத்துள்ளது. இது டிரம்ப் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 2016 தேர்தல் காலகட்டத்தில் நடந்த சம்பவம் இது. இளமைக் காலத்தில் டிரம்ப் பல பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். 2016 தேர்தல் ஆண்டில் இது தொடர்பான செய்திகள் தனது இமேஜை பாதிக்கும் என்பதால் அவை வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால், பிரபல ஆபாசப் பட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ், டிரம்ப் தன்னுடன் உறவில் இருந்ததாக தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார். டிரம்ப் தன்னுடன் இப்படி நெருக்கமாக இருந்த போது, அவரது மனைவி மெலினா குழந்தை பிறப்புக்காக சென்றிருந்ததாகவும் கூறியிருந்தார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது.
மனைவி பிரசவத்திற்கு செல்லும் போது, ஆபாசப் பட நடிகையுடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் நெருக்கமாக இருந்தார் என்று டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்போது டிரம்ப் தரப்பு ஸ்டோர்மி டேனியல்ஸை தொடர்பு கொண்டுள்ளது. அதாவது அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரம் இருந்த போது, தன்னைப் பற்றியும் தன்னுடன் இருந்த உறவு குறித்தும் பேசக் கூடாது என்று ஸ்டோர்மி டேனியல்ஸிடம் 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) உடன் டிரம்ப் ஒப்பந்தம் போட்டார்.
இதைத் தொகையைச் சட்டவிரோதமாகத் தேர்தல் நிதியில் இருந்து கொடுத்தாக புகார்கள் எழுந்தது. டிரம்பின் வழக்கறிஞராக இருந்து இந்த ஒப்பந்தத்தைப் போட்ட மைக்கேல் கோஹன் இப்போது டிரம்பிற்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுவே அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இருப்பினும், தான் மீதான குற்றச்சாட்டை டிரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். எந்த காலகட்டத்திலும் தான் டேனியல்ஸுடன் தொடர்பில் இருந்தது இல்லை என்றும் தன்னை கண்டு அஞ்சி ஆளும் தரப்பு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவேன் என்றும், இதனால் மக்கள் தனக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் டிரம்பே சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இருப்பினும், மக்கள் பெரியளவில் டிரம்பிற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கவில்லை. இதனிடையே நேற்றைய தினம் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியானது. டிரம்ப் கைதாவது போலவும், அவரது மனைவி மெலினா கதறுவது போன்ற படங்களும் வெளியானது. இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் அதிபர் டிரம்பை போலீஸ் அதிகாரிகள் இழுத்துச் செல்வது போன்ற படங்களும் வெளியாகியிருந்தது. இதனிடையே அந்த அனைத்து படங்களும் போலியானவை என்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. டிரம்ப் போலீசாரிடம் சண்டையிடுவது போன்ற படங்களும் அவரை போலீசார் கட்டுப்படுத்தி கைது செய்வது போன்ற படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. பலரும் இந்த படங்கள் உண்மை என்று நினைத்து டிரம்ப் கைதாகிவிட்டது உண்மை என்றே நம்பத் தொடங்கினர்.
பொதுவாக இதுபோல வெளியாகும் போலி ஏஐ படங்களை எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். ஆனால், டிரம்பின் கைது குறித்து வெளியான இந்த படங்களைப் பார்த்தால் அது உண்மை என்பதைப் போலவே இருக்கிறது. மேலும், இந்தப் படங்களை ப்ளு டிக் கணக்குகளும் பகிர்ந்தாலேயே பலரும் நம்பினர். இருப்பினும், இது போலி படங்கள் என்பதால் ட்விட்டர் இந்த படங்கள் இருக்கும் ட்வீட்களில் வார்னிங் மெசேஞ்சை இணைத்துள்ளது. முன்னதாக ஒபாமாவும் ஜெர்மனி முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கலும் கடற்கரையில் இருப்பது போன்ற ஏஐ படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






