சென்னை உயா்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கக் கூட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக ! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றிடு!
என்ற கோரிக்கையை வலியுருத்தி இந்த தொடர் முழக்கக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்குரைஞர் கு.பாரதி தலைமை தாங்கினார், வழக்குரைஞர் க.சக்திராணி வரவேற்புரையாற்றினார், நோக்க உரை வழக்குரைஞர் ம.பாரி, தொடக்க உரை செந்தில் அதிபன் மாநில பொருளாளர் மதிமுக, நிறைவுரை ஆா்.எஸ்.பாரதி திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர், சிறப்புரையாற்றியவர்கள் பூவை ஜெகன்மூர்த்தியார் புரட்சி பாரதம் கட்சி, சி.இ.சத்யா, சு.க.முருகவேலராசன், சுப.வீரபாண்டியன் தி.க, கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம், வெற்றிமாறன், பொழிலன், வசீகரன் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் வழக்குரைஞர்களும் இந்த தொடர் முழக்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றி கொண்டிருக்கிறார்கள்.






