கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு,
ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பவர்கள் மக்களின் நம்பிக்கையைசீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகிறார்கள். மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி,அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அரசமைப்புச்சட்டப்படி சாதி, மத, இனத்தின் அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்றுஅடிப்படை உரிமைகள் கூறுகிறது. அதை மீறுகிற வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிற மோடி தலைமையிலான பா.ஜ.க.வினரின் பல்வேறுநடவடிக்கைகள் மக்கள் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்து வருகின்றஇந்நிலையில், நாட்டு மக்கள் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு,விவசாயிகளுக்கு நியாய விலை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளினால் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கிற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது. இதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நாள்தோறும்போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள்,கவலைப்பட்டதாக தெரியவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர் இந்தநாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதனால்,மக்கள்பிரச்சினைகளைநாடாளுமன்றத்தில்பேசுகிறவாய்ப்புமறுக்கப்படுகிறது.பா.ஜ.க. ஆட்சியின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரானஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சிக் காலத்தின் இறுதியில் 16 மே 2014 அன்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின்மதிப்பு 58.58 ஆக இருந்தது. ஆனால், தற்போது அது ரூபாய் 85.27 ஆக கடும் வீழ்ச்சியைசந்தித்துள்ளது. இதனால் இறக்குமதி செய்கிற பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துவருகிறது. இந்த உயர்வு தொழில் வளர்ச்சி, குறிப்பாக, சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்குகடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்படுகிறநிலை ஏற்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. மக்களின்வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.எனவே, பிறக்கப்போகிற 2025 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும்,மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள்எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம்அமைய அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு