1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (குறள் 137)
விளக்கம்:
ஒழுக்கத்தினால் அனைவரும் உயர்வடைவர். ஒழுக்கம் தவறுவதால் தாம் அடையத்தகாத பெருமை பழியை அடைவர்.







