16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
ஒற்றுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கும்
பொன்றுந் துணையும் புகழ்.(குறள்: 156)
விளக்கம்:
பிறர் செய்த தீங்கை தண்டித்தவர்க்கு அந்த ஒரு நாள் மட்டும் இன்பம்.
ஆனால் தண்டிக்காமல் பொறுத்துக் கொண்டவக்கோ உலகம் அழியும் வரை
புகழுண்டு.






