16. பொறையுடைமை
பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (குறள்: 159)
விளக்கம்:
நெறி கடந்து நடப்பவரின் வாயில் வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் வாழ்ந்தாலும் துறவியரை விடத் தூய்மையுடையவர் ஆவார்.






