17. அழுக்காறாமை
===================
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் (167)
விளக்கம்:
பொறாமையுடையவனை விட்டு செல்வமும் செல்வத்தை்ததரும் திருமகளும்
நீங்குவதுடன் திருமகளுக்கு அக்காள் என்று கூறப்படும் வறுமைக்குக்
காரணமாக மூத்த தேவியாகிய மூதேவியை அவனுக்கு அறிமுகப்படுத்தி
விடுவாள். அதாவது வறுமையை அடைவான்.