15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனின் புகல். (குறள்: 144)
விளக்கம்:
எவ்வளவு உயர்ந்தவர் ஆனாலும் தாம் செய்யும் தீவினையைத் தினையளவும் எண்ணிப்பாராமல், பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டிற்குச் செல்வது என்னவாக முடியும்?






