உலகப் புகழ் பெற்ற சிவநெறியின் தலைமை தலமாக விளங்கக்கூடிய சிதம்பரம் ஆடல்வல்லான் திருக்கோவில் திரு தேரோட்டம் இன்று 12-01-2025 சிறப்பாக நடைபெற்றது.தேர் திருவிழாவையொட்டிநாட்டியம், மரபுக்கலைகள், இசை நிகழ்ச்சி, திருமுறைகள் ஓதல் உள்ளிட்டவையால் சிதம்பரம் நகரம் விழா கோலம் பூண்டது.இத்தேரோட்டத்தில் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் தமிழரின் தற்காப்பு கலையான சிலம்பாட்டம் பறை இசை அதிர நிகழ்த்தப்பட்டது. தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் சிறப்பாக சிலம்பாட்டம் ஆடினர். இந்நிகழ்வை தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் இரா.எல்லாளன் அவர்கள் வழி நடத்தினார்.இதை தொடர்ந்து தெய்வத்தமிழ் பேரவை மற்றும் ஆடல்வல்லான் திருக்கூட்ட அன்பர்கள் இணைந்து திருவாசகம் முற்றோதல் செய்தனர்.வாத்தியங்களுடன் முற்றோதல் கீழரத வீதியில் தொடங்கி மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதிய சிவத்தலத்தில் நிறைவு பெற்றது.இதில் ஆடல்வல்லான் திருக்கூட்டம் பொறுப்பாளர் சிவ கருணாநிதி, தெய்வத்தமிழ் பேரவையின் ஓதுவார்கள் பிரதாபன், சந்திரசேகர், உதயகுமார், கோதண்டபாணி, அத்திப்பட்டு நாகராஜன், அப்பர் உழவார பணிக்குழுவின் தலைவர் சந்திரகாசன், செயலாளர் ராஜாமாணிக்கம், தெய்வத்தமிழ்ப் பேரவை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.சுப்ரமணியசிவா மற்றும் சிவனடியார்கள், அன்பர்கள் பலர் பங்கேற்றனர்.