அண்மை செய்தி
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தீபாவளியை மது அருந்தி கொண்டாடிய நண்பர்கள்; நண்பனை கொன்றவர் கைது…

காஞ்சிபுரத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பனை கொலை செய்த வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இவரது வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (23). காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் கார்த்திக் சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இருவரும் அவ்வபோது இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சூர்யா அவ்வப்போது கார்த்திகை வா மது அருந்தலாம் என அழைப்பதுண்டு. இதனால் பலமுறை எரிச்சல் அடைந்த கார்த்திக்கும் இதை வெளியே காண்பிக்க முடியாமல் சூர்யாவை விட்டு விலகிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவிழாவின் போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சூர்யா கார்த்திக்கை மது அருந்த வருமாறு அழைத்துள்ளார். சில நாட்களாக பேசாமல் இருந்த நண்பன் மது அருந்த அழைத்ததால், ஏதாவது வாக்குவாதம் மற்றும் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய கார்த்திக், முன்னெச்சரிக்கையாக ஒரு கத்தியை எடுத்து தன்னுடைய வண்டியின் பின்புறம் மறைத்து வைத்துக் கொண்டு ஆரிய பெரும்பாக்கம் வந்து சூர்யாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு அபிராமி நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிக்கொண்டு ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரைக்கு வந்து இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கார்த்தி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மது போதையில் இருந்த சூர்யாவை தலை மற்றும் கழுத்தில் வெட்டி உள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்து போன சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டது. அதிக ரத்தம் வெளியேறியதால் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த கார்த்திக் வண்டியை எடுத்துக்கொண்டு பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு வந்து, நண்பன் சூர்யாவை நானே வெட்டி கொன்று விட்டேன் என கூறி சரணடைந்துள்ளார். இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என கார்த்திக்கிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி தினத்தன்று ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டை சேர்ந்த நண்பர்கள் மது போதையில் கொலை குற்றத்தில் ஈடுபட்டது கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61: