தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை ரயில்நிலையம் எதிரே உள்ள குரோம்பேட்டை பஸ்நிலையம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்களுக்கு நிழல் தந்த பழமையான அரச மரம் வெட்டப்பட்டது. வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த மரம் அகற்றப்பட்டது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.