நோயாளியின் பக்கவாதத்தை குணப்படுத்திய மருத்துவ குழுவினருக்கு பாராட்டு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழவுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, வெற்றிகரமாக நுண்துளை மூலம் மூளையின் ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் இல்லாமல் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன் மருத்துவக் கல்வி இயக்குனர் இரா.சாந்திமலர், தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் மரு.விமலா, ஒருங்கிணைப்பு அலுவலர் மரு.ஆனந்த்குமார், நரம்பியல் துறை தலைவர் பேரா.மரு.பூபதி, நுண்துளை நரம்பியல் கதிரியக்க சிகிச்சை நிபுணர் மரு.பெரியகருப்பன், உயர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.