பருவமழை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு ஆய்வு……

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, இராயபுரம்,
திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தென்மேற்கு
பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும்
கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும்
அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில்
ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலைமைச்சர் திருவாருரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இருந்தாலும் சென்னை பெருநகரில் பெய்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்வை எந்த வகையிலும் பாதிக்கப்படக்குடாது என்பதர்க்காக நேற்றய தினம் அமைச்சர்கள், அதிகாரிகள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த கைபெசியில் தொடர்பு கொண்டு எங்கல்லாம் மழைநீர் தேங்கி நிர்க்கின்றதோ
மக்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாமல் இயல்பான வாழ்கைக்கு மக்கள்
திரும்ப கூடிய அளவிற்க்கு போர்க்கால அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு
அந்த வகையிலே நேற்று இரவிலிருந்து பெய்த மழை ஒட்டுமொத்தமாக சென்னையிலே
10.03 செ.மீ மழை தேங்கிருந்தாலும் நுங்கப்பாக்கம் ஆலந்தூர் போன்ற பகுதிகளில் 16
செ.மீ அளவிர்க்கு மழை பதிவாகியுள்ளது.

அதேபோல் மீனம்பாக்கத்தில் 17.03 செம மீ அளவிற்கு மழை பதிவாகி இருக்கும்
நிலையில் 11 மணிக்கு எல்லாம் இயல்பு வாழ்க்கை மக்கள் திரும்பி இருக்கின்ற
போர்க்கால அடிப்படை நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சியும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும் இணைந்து நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறது. சென்னையில் இருக்கின்ற ஒட்டுமொத்த 21 சுரங்க பாதையில் 16
மாநகராட்சி வசம் இருந்தாலும் கணேசபுரம் சுரங்கப் பாதை மட்டும் தான் காலையிலே போக்குவரத்து நிறுத்தம் தண்ணீர் தேங்கி இருந்தது. அதுவும் 11 மணி அளவில் சுரங்கப்
பாதையில் தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டு இயல்பான போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக கடந்த 2021 ஆம் ஆண்டு பெய்த மழையின் போது தேங்கி இருந்த பல்வேறு இடங்களில் தண்ணீர் 2022 ஆம் ஆண்டு இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அதேபோல் 2022 ஆம் ஆண்டு பிறகு இந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்
பெய்திருக்கின்ற மழை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை ஒரே நாளில் பெய்ததாக
வானிலை பதிவிட்டு இருக்கின்றது. இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய அளவிற்கு இந்த இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக பல
இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை குறிப்பாக குளத்தூர் பகுதியில் 70 அடி சாலை
ஜவகர் நகர் செல்வி நகர் தில்லை நகர் போன்ற இடங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட
தேங்காய்வில்லை அதேபோல் தினத்தந்தி நாளிதழ் அமைந்திருக்கின்ற அந்தப்
பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை இவைகள் ஆறு மாத காலத்தில் பணியின்
காரணமாக இந்த நிலை ஏற்பட்டதும் நாம் கண்கூடாக இன்றைக்கு காண முடிகிறது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 2022-23 ஆம் ஆண்டு 1154 கிலோமீட்டர்
அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 800 கிலோமீட்டர் அளவிற்கு பணிகள் நிறைவு
பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 354 கிலோ மீட்டர் பணிகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன இவைகளின் மதிப்பு 1520 கோடி ரூபாய் இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவுபடும் என்று திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். புதிதாக 70 கிலோ மீட்டர் அளவிற்கு பணிகள் இப்பொழுது மேற்கொள்ள பட்டிருக்கின்றன. இந்த 70 கிலோ மீட்டர் அளவிற்கு
மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த பணிகள் உடைய மதிப்பு 250 கோடி ரூபாய் இந்த
பணிகளும் பருவ மழைக்கு முன்பாக இந்தப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு உண்டான
திட்டமிடல் தொடங்கி இருக்கின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி. இந்த மழையில் 30 இடங்களில் சுமார் 6 மரங்கள் பெரிய அளவிலும் 24 சிறிய அளவிலும் மரங்கள் முடிந்து விழுந்தது உடனடியாக அவைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது இருக்கின்ற நிலையில் 3,200 பணியாளர்கள் இந்த வெள்ள நிவாரண பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த மழையால் மக்கள் எந்தவித பாதிப்புக்கு உள்ளாகாமல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது.

பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தினுடைய பணிகளை எடுத்துக்
கொண்டால் சுமார் 1530 இடங்களில் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதேபோல்
2000 அளவில் போதிய பணியாளர்கள் களத்தினில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் 330 கழிவுநீர் அகற்றும் நிலையங்களில் முழுமையாக
மின்சாரணத்துடைStorage pumping station நிலையில் உள்ளன. 250 ஜெனரேட்டர்கள்
கைவசம் தயார் நிலையில் இருக்கின்றது.மின்சார பகுதிகளில்ஏதாவது ஏற்பட்டால் அந்த இடங்களில் ஜெனரேட்டரை பயன்படுத்தி கழிவு நீரையும் மழைநீரையும்
வெளியேற்றுவதற்கு உண்டான பணிகளையும் மேற்கொள்ளபட்டு வருகின்றன்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 2,260 பணியாளர்கள் 20 பிரிவுகளாக
பிரிந்து சுமார் 138 இடங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே
ஒட்டுமொத்தமாக விழப்படும் மரங்களை அகற்றப்படுவதற்கு 6 சக்தி மின் வாகனங்கள்
பயன்பாட்டில் உள்ளன.200 மினி மரங்களை வெட்டுகின்ற கருவிகள் பயன்படுத்துவதற்கு உண்டான ஆட்களோடு தயார் நிலையில் உள்ளன.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 24மணி நேரமும் ரிப்பன்
கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கம்ப்ளைன்ட் சென்டர் 1913
லைன்களைக் கொண்ட கம்ப்ளைன்ட் செல்லும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி
ஒட்டுமொத்தமாக போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் வந்தால் எப்படி
முழுவதுமாக அரசு இயந்திரம் செயல்படுமோ அந்த வகையில் அரசு இயந்திரத்தை
முடித்துவிட்டு மக்கள் பாதிப்படையாத வகையில் பெருமழை வந்தாலும் பாதுகாக்கின்ற நடவடிக்கையிலேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சியும் தமிழ்நாடு மின்சார வாரியமும், பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும் இணைந்து துரித பணியிலே தங்களை முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மக்களும் இந்த துரித பணியை பாராட்டுகிறார்கள் நேற்று இரவிலிருந்து பெய்த மழை காலையில் ஒரு 2 மணி நேரம் நேரத்தில் முழுமையாக இயல்பு வாழ்க்கை திரும்பியதை மக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்
நாளைய தினம் இன்று பெய்த மழையினால் பல தாழ்வான இடங்களில் மழைநீர்
தேங்கியுள்ள காரணத்தினால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் எனவே
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தி உள்ளார்கள்
அதன் அடிப்படையில் எங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் தேவைப்படுகின்றனவோ
அங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் கொளத்தூர் பகுதியில் நானும்
பொறுப்பு ஆணையர் அவர்களும் இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைக்க உள்ளோம்என தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திரு.வி.க நகர் மண்டலத்திற்க்குட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் மழை நீரை முழுவதும் அகற்றப்பட்ட நிலையை
பார்வையிட்டார், தொடர்ந்து கணேசபுரம் சுரங்கப்பாதை சீர் செய்யப்பட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் திரு.விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) , திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்) , திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்) , நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.நேதாஜி யு.கணேசன், திரு.பி.ஸ்ரீராமுலு அவர்கள், திருமதி சரிதா மகேஷ்குமார் , திரு.பி.கே.மூர்த்தி , திரு.கூ.பி.ஜெயின் , தலைமைப் பொறியாளர் (பொது), மண்டல அலுவலர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவமழை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு ஆய்வு……

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.