அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

‘பாரத்’ என்ற பெயரை பாஜக ஆட்சிக்கு வந்தபோதே மாற்ற வேண்டியது தானே சீமான் கேள்வி..

“நாட்டுக்கு பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது. 150 லட்சம் கோடி ரூபாய் கடனில் இந்த நாடு இருக்கிறது. பெயரை மாற்றுவதால் கடனை தள்ளுபடி செய்துவிடுவார்களா? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் அப்படியெல்லாம் உருவாகி விடுமா? ஆட்சிக்கு வந்தபோதே பாரத் என்று ஏன் பெயர் மாற்றவில்லை?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர்: “இந்த பாஜக ஆட்சியில், முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் செய்தது கிடையாது. எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பாரத் என்று வையுங்கள், இல்லை சூரத் என்று வையுங்கள்.

என் நாடு தமிழ்நாடு. அதனால், அவர்கள் நாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும். வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் என்பதால் பெயர் மாற்றுகின்றனர். இந்த நாடே அவர்கள் உருவாக்கி வைத்த நாடுதானே. வில்லியம் ஜேம்ஸ் கையெழுத்திட்டதால்தானே இந்து என அறியப்பட்டீர்கள். அந்த பெயரையும் மாற்றிவிடுங்கள். பாரத் என்ற பெயர் வைத்துவிட்டு, இந்துவுக்குப் பதில் வேறு ஏதாவது பெயர் வைத்துகொள்ளட்டும்.

நாட்டுக்கு பெயர் மாற்றுவதால் என்ன மாற்றம் வரப்போகிறது. 150 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. பெயரை மாற்றியதால் தள்ளுபடி செய்துவிடுவார்களா? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் அப்படியெல்லாம் உருவாகி விடுமா? ஆட்சிக்கு வந்தபோதே பாரத் என்று ஏன் பெயர் மாற்றவில்லை?

4 மாதத்தில் தேர்தல் வருவதால், சிலிண்டர் விலை குறைகிறது. சட்ட விதிகளின் பெயர்கள் எல்லாம் மாறுகிறது. சந்திராயன் சரியாகச் சென்று நிலவில் இறங்குகிறது. சூரியனுக்கு ஆதித்யா செல்கிறது.

இந்தியா ஒரு நாடல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆல் இந்தியா ரேடியோதான். இந்தியா ரேடியோ கிடையாது. மாநிலங்களவைதான் அது, மாநிலங்கள் என்றால், பல தேசங்களின் ஒன்றியம்தான் அது. அப்படியிருக்கும்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே தேர்வு, நான் கேட்கிறேன் ஒரே நீர் எங்கே? ஒரே நாடு என்றால், காவிரியில் ஏன் தமிழகத்துக்கான நீரைப் பெற்றுத் தரமுடியவில்லை உங்களால்? ஒரே நாடு குறித்து பேசும் நீங்கள் ஏன் அங்கு வாய்மூடி மவுனமாக இருக்கிறீர்கள்?” என்றார்.

அப்போது அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான்கூட சொல்கிறேன், அந்த சாமியார் தலையை வெட்டினால் 100 கோடி தருகிறேன். சாமியார் என்பவர் அனைத்தையும் துறந்த பற்றற்றவர், சாந்தமே உருவானவர்கள்.ஆனால், அந்த சாமியார் ரவுடி போல் பேசியிருக்கிறார். உதயநிதி கருத்து கூறியிருந்தால், அவரது கருத்துடன் மோதியிருக்க வேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கிறது. மனிதனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கிறான் என்று அவர்கள் பேசியிருக்க வேண்டும். இந்த கருத்தில் நான் உடன்படவில்லை. மனித பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு பார்க்கும் எவனும் எனக்கு எதிரிதான். சாமியர்களுக்கு சாதியும், மதமும் இரண்டு கண்கள். மதத்தின் வேர் சாதி. நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்று சாமியார்கள் கூடவில்லை என்றால், அவர்களுக்கு பத்து பைசா தரமாட்டார்கள். அதனால், அவர்களுக்கு சனாதனம் வேண்டும். பிறப்பின் அடிப்படையில் பேதம் வேண்டும்” என்று சீமான் கூறினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்