பிரதமர் நரேந்திர மோடிக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு !

துபாய்:
சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு துபாய் சென்றார். அங்கு அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

சர்வதேசத் தலைவர்கள் பலரும் துபாய் வந்துள்ள நிலையில் அங்கு தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சிமாநாடு அதிக கவனம் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாtட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை தொடர்பான இன்னும் 2 உயர் மட்ட கருத்தரங்குகளின் கலந்து கொள்கிறார்.
துபாய் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ”COP28 உச்சி மாநாடானது பாரீஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் காலநிலை மாற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த மாதிரியாக முன்னேறியுள்ளன, எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை பற்றியும் அவற்றை செயல்படுத்தும் வழிமுறையை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பளிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

COP28 உச்சி மாநாடானது நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறும். ஐக்கிய அரபு அமீரகம் இந்த மாநாட்டை ஒருங்கினைத்து நடத்துகிறது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் கூட்டுமுயற்சியை வலியுறுத்தும் என தெரிகிறது. அதே போல கரியமிலவாயு உமிழ்தலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல் பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகள் வறுமையில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் பற்றியும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த 27வது மாநாட்டிலும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இது எப்படி வேலை செய்யும் என்பதில் இன்னமும் தெளிவு ஏற்படவில்லை. அமெரிக்கா தன் வரலாற்று உமிழ்வுகளுக்கான இழப்பீட்டை செலுத்த மறுத்துள்ளது இந்தத் தெளிவற்ற நிலைக்கான ஓர் எடுத்துக்காட்டு. எனவே, நடப்பு மாநாட்டில் நிதியுதவி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் என்பது கடந்த 2015-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டன. வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக வரையறுக்கப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காலப் போக்கில் இந்த ஒப்பந்தத்தில் பல வளர்ந்த நாடுகளும் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் 28வது COP உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு இந்த மாநாட்டில் பங்கு பெறும் தலைவர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு