புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மயக்க மருந்துக்குப்பின் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சை பிரிவுகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, இயக்குனர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தி.சி.செல்வவிநாயகம், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பார்த்தசாரதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





