மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:
சென்னை, சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து மகளிர் தின விழாவை நடத்தியது. இதில் 10வது மண்டல குழு தலைவர் எம்.கிருஷணமூர்த்தி தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் வழக்கறிஞர், ஸ்ரீதர், மோகன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகளிர்தின விழாவில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தி யாளர்களிடம் தெரிவித்தாவது:
எனக்கு 5 வயது இருக்கும் போதே எனது தாய் இறந்துவிட்டார். என்னை முன்று சகோதரிகள் தான் வளர்த்தார்கள். அவர்களும் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். தாயையும், சகோதரிகளையும் இழந்த நான் மகளிர் கூட்டத்தில் கலந்து என் அம்மாவாக சகோதரிகளாக நினைத்து அவர்களுடன் வளர்ந்து வந்தேன். ‘என்னை கவுன்சலராக, எம்.எல்.ஏவாக உருவாக்கியவர்கள் சைதை தொகுதி மக்கள். மகளிர் குழுவை குழுவை 89 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கி மகளிர் மேம்பாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் வாய்பாயே காலில் விழுந்து வணங்கிய மதுரை சின்ன பிள்ளை அம்மையாரை அழைத்தேன். அவர் உடல் நல குறைவாக இருப்பதை கேட்டு அவருக்கு மருத்துவ உதவி செய்ய ஏற்பாடு செய்து இருந்தேன்.
சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார்நகர், கோதாவரிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர்களை ஒருங்கிணைத்து பல்வேறு வகையான போட்டிகளை ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்குவதற்கு ஏதுவாக இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது.
முத்தமிழ் அறிஞர்கலைஞரால் 1989ஆம் ஆண்டு மகளிர் சுயஉதவிக்குழு என்கின்ற மகத்தான திட்டத்தை தொடங்கி இன்று மகளிர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மகளிருக்கான ஏராளமான திட்டங்களை அறிவுறுத்திருக்கிறார். மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளில் பெரும் கடன்களின் தொகையினை உயர்த்தி தந்திருக்கிறார்.
ஏற்கெனவே மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடனான ரூ.2574 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்திருக்கிறோம். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மகளிர்களுக்கு தேவையான உதவிகளை முன்னின்று செய்துவருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இன்புளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி சுகாதாரபணியாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400