உலக அமைதிக்காக பிறக்கும் இயேசு கிறிஸ்து பிறப்பின் முதல் நற்செய்தி உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும். இதோ உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்பதே ஆகும்.
இந்தியாவில் சமய நல்லிணக்கம் உண்டாககுவதற்கு இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாட வேண்டும் அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக. இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
ரஷ்யா – உக்ரைன் போல இஸ்ரேல் – பாலஸ்தீனம் போல இந்தியாவில் சனாதனம் – சமூகநீதி யுத்தம் துவக்கம்.
கிறிஸ்தவ திருச்சபை தலைமையும் சிறுபான்மையின மத தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களை
சஸ்பென்டு செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் சிறுபான்மையின மக்கள் போராடி இருக்க வேண்டும். மக்கள் மேம்பாட்டு கழகம் கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு தெரிவிப்பது ஒன்றிய பிஜேபி ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பில்லை என்பதை திருச்சபையாளர்கள் புரிந்து கொண்டு கிறிஸ்தவ மதத்தையும், மக்களையும் பாதுகாக்க திருச்சபையாளர்கள் போராட முன் வரவேண்டும்.
அப்போது போது தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களை பாதுகாக்க முடியும் கிறிஸ்தவம் காப்போம் மாநாட்டின் முக்கியத்துவத்தை திருச்சபையாளர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும் ” கிறிஸ்தவம் காப்போம் ” மாநாடு சிறப்பாக நடத்திட அனைத்து சபைகளின் ஆயர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
புதிய ஆண்டின் 2024 பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கடலூர் மஞ்சகுப்பம் மாநகராட்சி திடலில் நடைபெற இருக்கும் கிறிஸ்தவம் காப்போம் மாநாட்டின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கிறிஸ்தவ மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கையை அரசியல் முறையில் தெரிய படுத்துவோம்.
இந்தியாவில் 1950 – ஆண்டிற்கு பிறகு கிறிஸ்தவர்களின் அனைத்து விதமான இட ஒதுக்கீடு உரிமைகள் சிறுபான்மை சலுகைகள் அனைத்தையும் மத்திய அரசு பரித்து விட்டது இப்போது கிறிஸ்தவர்களுக்கு மத சலுகை, சாதி சலுகை இல்லை என்றாலும் கூட அன்பு செய்கிறோம்.
நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு சிறுபான்மையை சார்ந்த மதங்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவர்ளுக்கு அச்சுருதலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரையில் கிறிஸ்தவர்கள் பேசாத விஷயங்களை நம் மக்கள் மேம்பாட்டு கழகம் பேசி வருகிறது. அதற்கு காரணம் மக்கள் மேம்பாட்டு கழகம் எல்லா விவகாரத்திலும் அரசு விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது திருச்சபையில் உள்ள குறைகளை சுட்டி காட்டி வருகிறது.
மேலும் மத்திய-மாநில அரசுகள் கிறிஸ்தவ மக்ளுக்கு இழைத்து வரும் இட ஒதுக்கீடு பற்றிய துரோகத்தையும்
அரசியல் கட்சிகள் கிறிஸ்தவர்களுக்கு அழுகிற பிள்ளைளுக்கு வாழைப்பழம் கொடுப்பதை போல இட ஒதுக்கீட்டில் ஏமாற்றி வருவதையும் இனியும் சகித்துகொள்ள முடியாது மேலும் அரசியலில் கிறிஸ்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காமல் இருட்டடிப்பு செய்வதையும் மக்கள் மேம்பாட்டு கழகம் தோலுரித்து காட்டி வருகிறது.
இதுவரையில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் கிறிஸ்தவர்களை ஏமாளிகளாக பார்க்கும் பார்வையை
மக்கள் மேம்பாட்டு கழகம் உடைத்து நொறுக்குகிறது. ஏனெனில் கிறிஸ்தவர்களை திருச்சபையே உதாசீன படுத்துவதே இதற்கு முக்கியமான காரணமாகும். இப்படி பொது வெளியில் சுட்டிக் காட்டும் முறையான அரசியல் அமைப்பு தான் மக்கள் மேம்பாட்டு கழகம் இன்னமும் ஒரு சிலருக்கு இயக்கத்திற்கும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் திருச்சபையில் பொறுப்பில் இருப்பது பரிதாபமாக இருக்கிறது.
ஆனாலும் அரசியலில் ஈடுபட்ட பிறகு எல்லா தடைகளையும் எதிர்கொள்ளும் வலிமை மக்கள் மேம்பாட்டு கழகத்திற்கு கூடிக்கொண்டே வருகிறது. அதற்கு காரணம் கிறிஸ்தவ மக்களின் ஆதரவு வலுத்து வருகிறது. நிச்சயம் மக்கள் மேம்பாட்டு கழகம் மக்கள் வாழ்வை மேம்படுத்தும் ஏனெனில் இது இயேசு கிறிஸ்துவின் தத்துவத்தை உள்வாங்கி போராடும் கட்சியாகும்.
மக்கள் மேம்பாட்டு கழகம் யாருக்கும் எதிரான கட்சி அல்ல, எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் மத துஷ்பிரயோகத்தால் கிறிஸ்தவ மக்கள் பாதிக்கப்படுவதை மக்கள் மேம்பாட்டு கழகம் வேடிக்கை பார்க்காது. இந்தியாவில் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சட்ட அமைச்சகம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம என பல்வேறு அரசுக்கேந்திரங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய அனைத்து பணிகளை இடை விடாமலும் சோர்வடையாமலும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதை தான் மக்கள் மேம்பாட்டு கழகம் ” கிறித்தவ மாடல் ” ஆட்சி என்று சொல்கிறது. அதை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்கும் அழைப்பு விடுக்கிறது. உலக வாழ் அனைத்து மக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் !!!






