சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் நிறைவு விழாவில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முதல் பரிசினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் வழங்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் மரு.செல்வவிநாயகம் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் டாக்டர்.பி.சந்திரமோகன், சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.