சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றியமைத் ததற்குக் திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை, கலைஞரின் அடையாளம் இல்லாத ஊரே கிடையாது.
பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் இந்த முன்னோடித் திட்டம், கடந்த 2022-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஏழை எளிய மாணவர்களின் பசியைப் போக்கி, பள்ளி வருகையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பொதுமக்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு திட்டமாகும்.
சமீபத்தில் இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, அதன் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் திமுக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கிய திட்டத்தின் பெயரையே மாற்றுவது சரியான நடைமுறை கிடையாது.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட நூலகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளன. கோவை பெரியார் நூலகம் கட்டப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. மேலும் திருச்சி, கடலூர், சேலம், நெல்லையில் கட்டப்பட்ட நூலகங்களும் திறக்கப்படவில்லை.
மக்கள் நலனுக்காகவும், மாணவர் நலனுக்காகவும் கொண்டு வரப்படும் முன்னோடித் திட்டங்களின் அரசியல் அடையாளங்களை மாற்றுவதைத் தவிர்த்து, அவற்றின் அடிப்படைச் செயல்பாடுகளைத் தடையின்றித் தொடர்வதே முக்கியம்.
முதல்வர் அலுவலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தற்போது உள்ள அறையிலேயே பணிகளை பார்க்க வேண்டியதுதானே. முதல்வர் புதிய அலுவலகம் அமைப்பதில் விடுக்கப்பட்ட டெண்டரில் விதிமீறல் நடந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்து வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்-வர் விஜய் அலுவலகம் மாற்றப்படுவது ஏன்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை,புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த






