மருத்துவப் பயன்கள் : இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்கவும், கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைத்து நச்சு நீர் வெளியேறவும், மூக்கிரட்டை உதவி செய்யும். புற்று நோய், புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும். தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும்.
வீட்டைச் சுற்றிலும் யாரும் பயிராடமல் தானாகவே முளைத்து, அதிகம் உண்ண படாத ஒருவகையான கீரை “மூக்கிரட்டை கீரை”. இந்தக் கீரையின் பயன்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். நிலத்தில் தனித்துப் படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்த கீரையாகும். இந்த மூக்கிரட்டை என்னும் மூலிகை கீரை. இது ஊதா வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை கீரை. இலைகளின் மேல் பகுதி பச்சையாகவும், கீழ் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். வேர் தடிமனாக இருந்தாலும் இவை பூமிக்குள் இருக்கும். தண்டுகள் தடித்து காணப்படும்.
இது சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும். மூக்கிரட்டை கீரைக்கு “புனர்னவா” என்றும் வடமொழியில் அழைக்கின்றனர். ‘புனர்’ என்றால் மீண்டும் என்று பொருள். ‘நவா’ என்றால் புதிது என்று பொருள். நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி தருவதால் இந்த பெயர்.
இந்த கீரை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் அரிய தன்மைகள் கொண்டதாகும்.
மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.
முக்கிய குறிப்பு: இந்தக் கீரையை கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.






