மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் பிரான்ஸ் அதிபர் !

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார்.பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் விமானநிலையத்தில் அவரை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரான்ஸ் ராணுவ இசைக்குழுவினர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஓட்டல் முன்பாக ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டு, ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவபடுத்தினார்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.கடந்த காலத்தில், கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களால் பெறப்பட்டது. இவர்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், புட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.