சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் ரயில்வே அமைச்சகம் சார்பில் இன்று சிறப்பு விழா நடைபெற்றது. இதில் சுமார் 350 பெண் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ரயில்வே வாரியத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான சதீஷ் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அலைஸ் ஆர். டிர்கே (கட்டுரைப் போட்டி), குஷ்பு வர்ஷ்னி (பானை அலங்காரம்),பிதிஷா பட்டாச்சார்ஜி (விளையாட்டு) மற்றும் ஷிவாங்கி தோமர் (கலைத் துறை) ஆகியோர் அந்தந்தப் பிரிவுகளில் முதலிடம் பெற்றனர்.மேலும், இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 9 பெண் அதிகாரிகளுக்காகச் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வடக்கு ரயில்வே மத்திய மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமில் 116 பெண் ஊழியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். விழாவில் யோகா செயல்முறை விளக்கம், சுகாதாரம் குறித்த உரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Wildlife Of Tamil Naduபுத்தகம் வெளியிடும் நிகழ்வு
சுற்றுலாதுறையில் பல்வேறு புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக சுற்றுலா துறை






