அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

வாரிசு அரசியல் என்றால் என்ன தெரியுமா?  : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

திமுகவின் வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கடுமையாக விமர்சனம்  செய்து வரும் நிலையில்,  வாரிசு அரசியல் என்றால் என்ன தெரியுமா?  அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

வாரிசு அரசியல் என்பது “இருப்பதை இழப்பவன் – தனக்கு ஒரு மகன் பிறந்து தன்னை போல தியாகம் செய்து கட்சிக்காக உழைத்தால் அவனுக்கு பதவி கொடுப்பதில் தப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது.  இதனால்  அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டில் 4முனை போட்டி நிலவி வரும் நிலையில், இந்த முறை பாஜக தமிழ்நாட்டில் கால்பதிக்க எண்ணி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அப்போது திமுகவின் வாரிசு அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதுபோல எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவின் வாரிசு அரசியலை தேர்தல் பிரசாரத்தின்போது  கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில்,  இந்த நிலையில்,   சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதியே ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், “ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்தவர்கள்தான் நாடாளுமன்றம் போக வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்ற கட்டிடத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஆளுங்க சட்டசபைக்கு வரலாம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு போக முடியாது என்று கூறினார். (துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் இந்தி தெரிந்தவர் மட்டுமின்றி, சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது)

“இந்த தேர்தல் வெற்றி பெறுவதற்கான தேர்தல் மட்டுமல்ல. ஜனநாயகத்தை காப்பாற்றும் தேர்தல். நான் வந்தால் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள் என மோடி சொல்கிறார். ஹிட்லர் போல மோடி செயல்படுகிறார். இதை அனைத்தையும் நாம் எதிர்ப்பதால் மோடிக்கு கோபம் வருகிறது. ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் நபர்கள் நண்பர்களாக இருந்தாலும் எதிர்ப்போம்.

வாரிசு அரசியலை ஒழிப்பேன் என பிரதமர் பேசி உள்ளார். வாரிசு அரசியல் என்றால் என்ன? ஆணாக இருப்பவன் திருமணம் செய்து கொள்கிறான். மிகுந்த ஆணாக இருப்பவன் குழந்தை பெற்று கொள்கிறான். இதற்கு மேல் இதைப்பற்றி பேச விருப்பமில்லை. கட்சி முக்கியம் கொள்கை முக்கியம் என உள்ளவர்கள் தான் திமுகவினர். வாரிசு அரசியல் என்பது “இருப்பதை இழப்பவன் – தனக்கு ஒரு மகன் பிறந்து தன்னை போல தியாகம் செய்து கட்சிக்காக உழைத்தால் அவனுக்கு பதவி கொடுப்பதில் தப்பில்லை”(அமைச்சர் துரைமுருகனும், தனது மகன் கதிர்ஆனந்தை எம்.பி.யாக்கி அழகு பார்த்தவர், தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உதயநிதி, கதிர் ஆனந்த், அருண்நேரு போன்றவர்கள் என்ன தியாகம் செய்தவர் என்பதுதான் புரியவில்லை)

திமுகவை தேய்த்து அழித்து விடுவேன் என்கிறார் மோடி; சாவுக்கு அஞ்சாத படை திமுக. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன தெரியுமா? புல் முளைத்திருக்கும் இன்று. திமுகவை அழிக்க முடியாது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்தியமாக நாட்டில் ஜனநாயகம் இருக்காது”.

இவ்வாறு பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர