அடுத்த ஆண்டு 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பூவிருந்தவல்லி சட்டமன்றத தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தொடரும் புரட்சி பாரதம் கட்சி, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளதால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதி ஒதுக்கும் என புரட்சி பாரதம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





