அம்பேத்கர் சிலைக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைவர்கள் மாலை அணிவிப்பு

புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுவை மாநில பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ராஜா தியேட்டர் அருகிலிருந்து ஊர்வலம் கிளம்பியது. பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், வெற்றிச்செல்வன், செல்வம் ஆகியோர் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பா ளர் சிவா தலைமையில் பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, சண். குமரவேல், மூர்த்தி, லோகை யன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம் என்கிற சரவணன், காந்தி, அருட்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தலைமை கழகத்திலிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர். அம்பேத்கர் சாலையில் உள்ள அவரின் சிலைக்கும், பாரதிபூங்காவில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள், கருணா நிதி, கணேசன், மூர்த்தி, நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி உட்படபலர் கலந்து கொண்டனர். புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து பாரதி பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு