உச்சநீதிமன்ற தீர்ப்பு – மத்திய அரசு !

மத்திய அரசு இனி எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்ற சட்ட வினாவுக்கு உச்ச நீதிமன்றம் சரியான விடை கூறவில்லை. லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் M.P தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு அரசாங்கத்தின் அதிகாரத்துவ செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இந்தத் தீர்ப்பினால் நீதிமன்றங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும்.

ஜம்மு – காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் என்னும் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது அதற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் போது குறைந்தபட்ச அளவில் சட்டப்படியான வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. அது தொடர்பான குடியரசுத் தலைவரின் ஆணை அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -367ஐ திருத்துவதனூடாக உறுப்பு -370 ஐ திருத்தியிருப்பது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால், இத்தகைய சுற்றுவழியில் செல்லாமல் நேரடியாகவே அதைத் திருத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது கூட்டாட்சியின் அஸ்திவாரத்தை அசைத்து பாா்ப்பதாக உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிக்கான மாநில அந்தஸ்து கூடிய விரைவில் மீட்கப்படும் என ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மாநிலத்தை உடைத்து லடாக் என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்கிய பிறகு மாநில அந்தஸ்தை மீட்பதாகச் சொல்வது ஏமாற்று வேலை.

அங்கு தேர்தல் நடத்த 2024 செப்டம்பர் 30 வரை கால அவகாசம் கொடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். கடந்த 5 ஆண்டுகளாகவே தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் அங்கு, தேர்தலை நடத்துவதற்கு ஏன் இவ்வளவு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஒன்றிய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும்தான் தீங்கிழைத்தது. இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த கூட்டாட்சி முறைக்கும் உச்சநீதிமன்றம் ஊறு விளைவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த நிலைபாட்டை மக்கள் ஒரு பொதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.