
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாளை மறுநாள் விஜய் முன்னிலையில் ‘தமிழக வெற்றி கழகத்தில்’ இணையப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்து வருகின்றன.
இந்நிலையில், நாளை தனது எம்.எல்.ஏ பதவிக்கு செங்கோட்டையன் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதிமுக வரலாற்றில் அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.