காட்டுப்பாக்கத்தில் ரூ.3.63 கோடியில் சாலை & மழைநீர் கால்வாய் பணி: கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி:
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவரது முயற்சியால் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.3 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது.
விழாவில் ஊரக சாலைகள் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் சேதுராமன் ஆகியோர் வரவேற்றனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், பொது குழு உறுப்பினர் வி.குமார், ஒன்றிய நிர்வாகிகள் டி.அண்ணாமலை, ஏ.ஜனார்தனன், எம்.இளையான், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.புககேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், வயலை பிரபாகரன், வி.பி.பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, டி.குமரேசன், டி.திருமலைராஜ், சாய்மோகன், கேசவன், வி.தணி காசலம், பி.சுரேஷ், ரமேஷ்பாபு, கே.எம்.குட்டியா, ஒன்றிய வர்த்தக அணி எம்.ஆர்.கே.ரவி, ஒன்றிய ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் வெல்டிங் மனோகர், மகளிர் அணி செல்வி, காட்டுப்பாக்கம் கிளை நிர்வாகிகள் கே.ஜி.ஆர்.ஸ்டாலின், கே.ஜி.பாலா, பி.ஜி.கிருஷ்ணன், கே.வி.சுப்பையா, பச்சையப்பன், பந்தன், கே.ரமேஷ், எம்.நடேசன், அம்மன் நகர் சிவா பி.ஜி.நடேசன், ஸ்ரீ ரவி, கே.எஸ்.ஸ்ரீதர், பூந்தமல்லி ஒன்றிய குழு உறுப்பினர் கே.ஜி.டி. கௌதமன், காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு