சென்னை :
சென்னை கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனை பட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர் இன்று மின்சாரம் தாக்கி பலியானார்.
சென்னை கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ரூ. 230 கோடி மதிப்பீட்டில், 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் உடையதாக, 1000 படுக்கைகளுடன்கூடிய இந்த மருத்துவமனைக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 1.4.2022 அன்று தொடங்கிய இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள், மே மாதம் 15-ம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் ஏராளமான வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டிட பணியின் போது இன்று மாலை மின்சாரம் தாக்கியது. உடனயி£க அவர் சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்க கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கிண்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






