அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

சென்னையில் ரத்தசோகை ரத விழிப்புணர்வு யாத்திரை:மாநாடு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்பு

சென்னை, ஆக.4:
தென்னிந்திய ரத்தசோகை விழிப்புணர்வு யாத்திரையை சென்னையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் பொதுவாக 32.7 சதவீதம்பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. பெண்களுக்கு குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களில் 34.6 சதவீதம் பேருக்கு ரத்தசோதகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் அவர்கள் குழந்தைகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48.5 சதவீதம் குழந்தைகளுக்கு ரத்தசோகையும் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பெண்கள் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.ஓ.ஜி.எஸ்.ஐ.) தலைவர் டாக்டர் ரிஷிகேஷ் பாய் தலைமையில் இந்தியா முழுவதும் ரத்தசோகை விழிப்புணர்வு யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை மூலம் 21 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிசச் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த யாத்திரை கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி ரிஷிகேஷில் தொடங்கியது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலம் உள்பட 5 மாநிலங்களில் உள்ள 21 நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் பயணம் செய்து 6 கோடி மக்களுக்கு மேல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவில் கடந்த ஜூலை 16ம் தேதி ரத்தசோகை யாத்திரை தொடங்கியது. கடந்த 3ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரிஷிகேஷ் பாய் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் நடைபெற்ற மாநாட்டில் இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரிஷிகேஷ் பாய், பொதுச் செயலாளர் டாக்டர் மாதுரி படேல், துணைத் தலைவர் சம்பத் குமார் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
இதில் பங்கேற்றவர்களை தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்க தலைவர் கே.எஸ்.ஜெயகுமாரி காமராஜ், செயலாளர் கே.எம்.குந்தவை சங்கர் ஆகியோர் வரவேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்புரையாற்றினார். இதில் டாக்டர்கள் சிந்தியா அலெக்சாண்டர், ஜெய்ஸ்ரீ கஜராஜ், எப்சிபா கிருபாகரன், ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசன், கமலா செல்வராஜ், மாதுரி, மோகனாம்பாள், சரஸ்வதி, சாவித்ரி சுப்பிரமணியன், வேணி ஆகியோருக்கு சிறந்த மகப்பேறியல் விருது வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் குந்தவை சங்கர் நன்றி கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர