புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






