தமிழ் ஆன்மீகம் போதும்… சமஸ்கிருத ஆன்மீக வேண்டாம்…: தமிழ் ராஜேந்திரன்

வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், தமிழர்களுக்கு முருக ராஜ்ஜியம் போதும். ராமராஜ்ஜியம் வேண்டாம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவைகளுக்கு ஏற்ற தமிழ் மொழியில் வழிபாடு உடன் இணைந்த தமிழ் ஆன்மீகம் போதும். எங்களுக்கு சமஸ்கிருத ஆன்மீகம் வேண்டாம். என்பதே தமிழர்களின் ஆன்மீக முழக்கமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வழிகாட்டிகளாக திருவள்ளுவரும், வள்ளலாரும், எண்ணற்ற சித்தர்களும் இருக்கிறார்கள். இவர்களின் வழிகாட்டல் எங்களுக்கு போதும்.
நாங்கள் தமிழ் சமயத்தை சேர்ந்தவர்கள். எங்கள் வேத நூல்கள் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருமந்திரம், தொல்காப்பியம், பன்னிரு திருமுறைகள் உட்பட்ட தமிழில் மூல மொழியில் எழுதப்பட்ட நூல்களே எங்களது மறைகள் எங்களது வேதங்கள். எங்களுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களை மொழி மாற்றம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை.
எனவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல. தமிழர்கள். தமிழ் சமயத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பான விரிவான தெளிவு பிறக்கும் வரை இந்து மதம் என்னும் ஒரு பெரிய வட்டத்துக்குள் தமிழ் சமயம் என்னும் தனித்தன்மை கொண்ட வட்டத்தை வைத்து நாங்கள் எங்கள் தனித்தன்மையை காத்துக் கொள்கிறோம். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துக்கள் எப்படி தாங்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தங்கள் சமயம் தனித்தன்மை கொண்டது என்றும் அரசு அனுமதி பெற்றுள்ளார்களோ அதே போல தமிழ்நாட்டில் உள்ள சிவனிய சைவ பெருமக்கள் பின்பற்றும் தமிழ் சமயம் தனித்தன்மை கொண்டது என்பதை நாம் நிறுவ வேண்டும்.
அதற்காக தமிழ் வழிபாடு, தமிழில் வாழ்வியல் சடங்குகள் போன்றவற்றை செய்து வருகிற சான்றோர்கள், ஆதீனங்கள், அருளாளர்கள், பீடாதிபதிகள், முன்வந்து உதவ வேண்டும். அப்போதுதான் தமிழுக்கு ஏற்றம் கிடைக்கும். தமிழருக்கு உயர்வு கிடைக்கும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை வந்து சேரும் என்று வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு