19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது, தீதாகப் பேசாதிருத்தல்.
==============================================================
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
விளக்கம்
பிறர் மகிழுமாறு சொல்லி, பிறரோடு நட்பாய்ப் பழகத் தெரியாதவர் சிரித்துக் கொண்டே பிளவு உண்டாகுமாறு புறங்கூறி உறவினரையும் பிரித்து விடுவார்.







