24. புகழ்
உலகம் உள்ளவரை அழியாது நிற்கும்.
=================================================================
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று… (குறள் 236)
விளக்கம்
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதனால் புகழோடு தோன்ற வேண்டும்.
அப்புகழுக்குரிய தகுதி இல்லாதவர் அங்கு தோன்றுவதை விடத் தோன்றாமல்
ஒதுங்கியிருப்பது நல்லது.







