சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இன்று சென்னை கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையின் அறிவிப்பில் “ தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் 60,587 தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் நடத்தப்படுவதுடன், ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் வருடத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நடத்தப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலத்திற்குட்பட்ட 5,138 நிரந்தர தூய்மை பணியாளர்களும்,4,864 தற்காலிக தூய்மை பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை மேற்கொள்ளும் இரண்டு தனியார் நிறுவனங்களில் 8,278 தூய்மை பணியாளர்களும் என மொத்தம் 18,280 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது சுகாதாரத் துறையின் மூலம் இந்த பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும், அவர்களின் உடல்நலம் காக்க, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள், தோல் பிரச்சனைகள், ரத்த சோகை, எழும்பியல் நோய்கள், கண் நோய்கள், பற்சிதைவு, குடல் மற்றும் கருப்பை இறக்கம் மற்றும் மனசோர்வு போன்ற நோய்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக இன்று கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 1,000 தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைகளை முகாமினை தொடங்கி வைத்தார்.
முகாமில் போதிய அளவில் மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர், மருத்துவர் சார் பணியாளர்கள் கலந்து கொண்டு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களுடன் உரிய பரிசோதனை மேற்கொள்ளவும், சிகிச்சை அளிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உயர் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உயிர் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இதனை தொடந்து 1 முதல் 15 மண்டலங்களிலும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், முழு உடல் பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் டி. எஸ்.செல்வ விநாயகம், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, நிலைக்குழுத் தலைவர் (கணக்கு) க.தனசேகரன், கோடம்பாக்கம் மண்டலக் குழுத்தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் (மத்திய வட்டாரம்), 138வது மாமன்ற உறுப்பினர் கே. கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





