நாங்குநேரியில் மீண்டும் ஒரு சம்பவம்: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 6 பேருக்கு வலை

நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன், சக மாணவர்களால் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தின் தாக்கம் இன்னும் தீயாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில், நாங்குநேரி அருகே நம்பி நகரில் முன்பகை காரணமாக ஒருவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி நம்பி நகர் ஊரை சேர்ந்த கண்ணன் என்ற கபாலி கண்ணன் (52) அதே ஊரைச் சார்ந்த வானுமாமலை (62) என்பவரை நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வைத்து கபாலி கண்ணன் என்பவர் அரிவாளால் வெட்டி உள்ளார்.
இது சம்பந்தமாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக அதற்கு அடுத்த நாள் அதாவது ஜூலை 31ம் தேதி அதே ஊரை சார்ந்த ஒன்பது பேர்கள் ஒன்றாக சேர்ந்து நம்பி நகரில் உள்ள கபாலி கண்ணனின் தோட்டத்தில் உள்ள வேலி கற்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக நாங்குநேரி காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பலி வாங்கும் நோக்கமாகவே கபாலி கண்ணன் என்பவரின் மகன் நவீன் (23) மற்றும் அவரது நண்பர்கள் நம்பி நகரில் உள்ள வாணுமாமலையின் வீட்டின் கதவுமீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்துள்ளனர்.
இதில் வீட்டில் இருந்த சோபா மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி உள்ளது. இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாங்குநேரியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவன் சக மாணவர்களால் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நாங்குநேரியில் முன் பகை காரணமாக ஒருவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை உயர்த்தியுள்ளது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு