அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

புதுச்சேரி: புஷ்கரணியில் நீராடும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – 200 போலீஸார் பாதுகாப்பு

புதுச்சேரி:
புஷ்கரணி வரும் பக்தர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தால் பந்தல் வசதி, நீராடும் பக்தர்கள் ஆடை மாற்ற ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகளும், 50 மொபைல் டாய்லெட்டுகளும் அமைக்கப்படும். 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் வல்லவன் கூறினார்.
நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, அந்தந்த ராசிக்குரிய ஆறுகளில் புஷ்கரணி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். புஷ்கரணி என்பதற்கு ஆறுகளில் புனித நீராடுதல் என்பது பொருளாகும். புஷ்கரணி விழாவின்போது, சம்பந்தப்பட்ட ஆறுகளில் மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசிக்குரிய ஆறுகளான கங்கை, சங்கராபரணி ஆகிய ஆறுகளில் புஷ்கரணி விழா நடத்தப்படுகிறது. இதன்படி, புதுச்சேரியில் ஓடுகின்ற சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அருகே புஷ்கர விழா வரும் 22ம் தேதி துவங்கி, மே 3ம் தேதி வரை 12 நாட்கள் முதல்முறையாக நடக்கிறது.
இவ்விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பொது மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும் விழாவிற்கு வருபவர்கள் பாதுகாப்பாக போக்குவரத்து நெரிசல் இன்றி வந்து செல்ல முக்கிய சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகள் என அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வல்லவன் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அவருடன் காவல்துறை சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி நாரா சைதன்யா, வில்லியனூர் சப்-கலெக்டர் ரோமில், எஸ்பிக்கள் மோகன்குமார், நித்யா, தாசில்தார் கார்த்திகேயன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், கோயில் சிறப்பு அதிகாரி சீதாராமன் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது புஷ்கரணி விழா ஏற்பாடுகள், நடந்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் வல்லவன் கூறியதாவது: “புதுச்சேரியில் முதல் முதலாக புஷ்கரணி விழா இங்கு நடைபெறுகிறது. அரசு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதற்காக 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சங்கராபரணி ஆற்றில் இறங்கி குளிக்க படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆடைகள் மாற்றுவதற்கு ஆண், பெண் என இரு பாலருக்கும் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்க முடியோதோருக்கு ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. 50 மொபைல் டாய்லெட்டுகள்,பொதுமக்கள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பந்தல்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக முதலுதவி மருத்துவ முகாம் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்கள், ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொது மக்களின் குடிநீர் வசதிக்காக 5 டேங்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் வசதிக்காக நகர பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் உள்ள சமூக விரோதிகளால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர