மீண்டும் லோக்சபா எம்.பி. பதவியை பெற்றார் ராகுல் காந்தி!

புதுடெல்லி:
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை லோக்சபா செயலகம் இன்று திரும்பப் பெற்றது. இதனையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி.யாக மீண்டும் நாடாளுமன்றம் திரும்புகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் மோடி பெயரை முன்வைத்து பேசிய பேச்சுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா திரும்பப் பெறப்பட்டது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக்கு குஜராத் அமர்வு மற்றும் குஜராத் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனையடுத்து ராகுல் காந்தியின் பறிக்கப்பட்ட எம்.பி. பதவி உடனே திரும்பி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு